முல்லைத்தீவில் ஜனாதிபதி

முல்லைத்தீவு மாவட்டத்துக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவு மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை திறந்து வைத்தார்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக் கருவில் உருவான நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டமானது முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 3 ஆம் திகதி முதல் இடம்பெற்று வருகின்றது.

இதனுடைய இறுதிநாள் நிகழ்வுகள் இன்றைய தினம் முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ள நிலையில் இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மாவட்ட செயலக வளாகத்தில் அமைக்கப்பட்ட இலங்கை வாழ்க்கை தொழில் வழிகாட்டல் நிறுவனத்தை (ஸ்மார்ட் ஸ்ரீலங்கா) சற்று முன்னர் திறந்து வைத்தார்.

இந் நிறுவனத்தின் மூலம் மக்களுக்கு பல நன்மைகள் கிடைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.