முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்: முதல் அமைச்சர் பழனிசாமி

ஆர்.கே நகர் இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் தண்டையார் பேட்டையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல் அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி கூறியதாவது

‘ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல, இந்தியாவே உற்று பார்க்கிறது. உயிரை கொடுத்தாவது வெற்றி பெற வேண்டும்’
* ஆட்சியிலும், கட்சியிலும் பல சோதனைகள், இதனை சந்தித்த வலுவான ஒரே இயக்கம் அதிமுக
* தேர்தல் ஆணைய விதிமுறைகளை அதிமுகவினர் பின்பற்ற வேண்டும்
* முறையாக வேட்புமனு தாக்கல் செய்தால், நிராகரிக்க மாட்டார்கள்
*ஆர்கே நகரில் நாளை மாலை முதல் பரப்புரை மேற்கொள்ள உள்ளோம்” என்றார்.

அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் பேசுகையில், “ ஆர்.கே.நகரில் அதிமுகவுக்கு அதிக ஆதரவு உள்ளது. மதுசூதனன் பெறப்போகும் வெற்றி வரலாற்று வெற்றியாக அமையும். ஆர்.கே.நகர் தேர்தல் நமக்கு சத்ய சோதனை” என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY