முறிந்து போனதா வரலட்சுமியின் காதல்…

சினிமா உலகில் நடிகர், நடிகைகள் காதலிப்பதும், பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிவதும் சர்வ சாதாரணமாகிவிட்டது. அந்த வரிசையில் தற்போது வரலட்சுமியின் காதலும் பிரேக் அப் ஆகிவிட்டதாக வெளிவந்துள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஷாலும், வரலட்சுமியும் காதலித்து வருவதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இந்நிலையில், வரலட்சுமி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

அதில், காதல் முறிவுகள் இப்போது மிகவும் மோசமான நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறது. ஏழு வருடமாக இருந்த காதலை ஒருவர் மேனேஜர் மூலமாக முறிந்துவிட்டதாக சொல்லி அனுப்புகிறார். உலகம் எங்கே போகிறது? காதல் எங்கே இருக்கிறது? என்று சொல்லியுள்ளார்.

இந்த டுவிட்டரில் வரலட்சுமி கூறும்போது, அந்த காதலர் யார் என்பதை குறிப்பிடவில்லை. இருப்பினும், தனது பிரேக் அப்பை மட்டும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். விஷாலும், வரலட்சுமியும் சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி வந்ததாக கூறி வந்தனர். ஆனால், இருவரும் காதலர்கள் என்பதை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதேசமயம் காதலிக்கவில்லை என்றும் கூறவில்லை.

எனவே, வரலட்சுமியின் இந்த டுவிட் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. வரலட்சுமியின் காதலர் யார்? என்பதே இன்னும் மர்மமாக இருக்கிறது. மேனேஜர் மூலம் காதல் முறிவை சொல்லிவிட்ட அந்த நாயகன் யார்? என்பதும் ரசிகர்களின் கேள்வியாக இருக்கிறது.

LEAVE A REPLY