முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட்டின் தேர்தல் அலுவலகம் தீக்கிரை

மட்டக்களப்பு மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துரைச்சேனை பகுதியிலுள்ள தேர்தல் பிரச்சார அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் போட்டிடும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கான அலுவலகம் பிறைந்துரைச்சேனை பகுதியில் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளது.

அத்தோடு குறித்த தேர்தல் பிரச்சார அலுவலகம் தாக்கப்பட்ட போது அருகில் இருந்த உணவகம் ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.