முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பு

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட செயலாளர் உள்ளிட்ட மூவருக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் மற்றும் பேராயர் இல்லத்தின் துணை ஆயர் இருவருக்கே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஒக்டோபர் 5 ஆம் திகதி முன்னிலையாகவுள்ளார்.

அத்தோடு, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஒக்டோபர் 06ஆம் திகதி அந்த அணைக்குழுவில் சாட்சியமளிக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.