முன்னணி கதாநாயகர்கள் அழைப்பு – பாண்டவர் அணி

pandavar_ani_victory_191015_tதென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியினர் வெற்றிபெற்றுள்ளனர். நாசர் தலைவராகவும், விஷால் பொதுச் செயலாளராகவும், பொன்வண்ணன், கருணாஸ் ஆகிய இருவரும் துணைத்தலைவர்களாகவும், மற்றும் பொருளாளராக கார்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

புதிய நிர்வாகிகளிடம் ஏற்கனவே பதவியில் இருந்த சரத்குமார், ராதாரவி ஆகிய இருவரும் பொறுப்புகளை ஒப்படைத்து விட்டனர். நாசர், விஷால், கார்த்தி, பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோர் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிடம் இருந்த இடத்துக்கு வந்தனர். அவர்கள் ஏற்கனவே வளாகத்தில் இடிக்கப்பட்ட விநாயகர் கோவில் இருந்த இடத்தில் மாலை அணிவித்து பூஜை செய்தனர்.

53a4a1bb-1f46-4cc2-b2da-d69bab2e7934OtherImage

புதிய நிர்வாகிகளின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில் நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பொதுக்குழுவை கூட்டும் தேதி குறித்து ஆலோசிக்கப்பட்டது. அனேகமாக இந்த வாரத்த்தில் பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் புதிய நிர்வாகிகள் பதவி ஏற்றுக் கொள்கின்றனர்.

அந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி கதாநாயகர்களை மற்றும் ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்களையும் அழைக்க திட்டமிட்டுள்ளனர். இந்த பொதுக்குழுவில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவது குறித்து முக்கிய முடிவுகள் எடுத்து தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.

LEAVE A REPLY