முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி; அடுத்த பேச்சுவார்த்தை 21ம் திகதி

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளுக்கு இடையிலான முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இடம்பெற்று முடிந்ததாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளார்.

இதன் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெற உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்தப் பேச்சுவார்த்தைக்காக ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர, முன்னாள் செயலாளர் ரோஹண லக்ஷ்மன் பியதாச மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால ஆகியோர் பங்குபற்றியிருந்தனர்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

புதிய கூட்டமைப்பை உருவாக்குவது சம்பந்தமான இந்தப் பேச்சுவார்த்தை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.