முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே பட்டதாரிகளுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கோட்டாபய

இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ், 50 ஆயிரம் பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்பு வழக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எனினும், நேற்று முன்தினம் வெளியான பெயர் பட்டியலில் பலரின் பெயர் இணைக்கப்படாமல் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து பட்டதாரிகள் பலர் குழப்பமடைந்திருந்தனர்.

இது தொடர்பில் ஜனாதிபதியும் அரசாங்கமும் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் கூடிய போது, மேலும் 10,000 பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.

இதனால் பட்டதாரிகள் நேற்றைய தினம் ஜனாதிபதியின் செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தினை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது