முதலில் மாகாணசபைத் தேர்தல் – தயாராகுமாறு சிறிலங்கா அதிபர் அறிவிப்பு

முதலில் மாகாணசபைத் தேர்தல்களே நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளர்களுக்கு, அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

நேற்று மாலை சிறிலங்கா அதிபர் செயலகத்தில், சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கான கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில், உரையாற்றிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்றும், அதற்குத் தயாராகுமாறும் கூறினார்.

ஆறு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்த பின்னரும், அவற்றுக்குத் தேர்தலை நடத்தாமல் இருப்பது அரசியலமைப்பை மீறுகின்ற செயல் என்றும், எனவே மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டியது முக்கியம் என்றும் அவர் கூறியுள்ளார்.