முதலமைச்சர் விக்கி – வெளிநாட்டு பிரதிநிதிகளுக்கிடையில் சந்திப்பு

வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

யாழ். கைதடியிலுள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று காலை இடம்பெற்றது.

சீனா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த சுமார் நாற்பதிற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

வடமாகாணத்தின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் நிலமைகள் தொடர்பில் குறித்த குழுவினர் முதலமைச்சரிடம் கேட்டறிந்து கொண்டனர்.