முடிவின்றி முடிந்தது சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவுடனான கூட்டு தொடர்பான எந்த முடிவையும் எடுக்காமல், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நிறைவடைந்துள்ளது.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று மாலை இடம்பெற்றது.

இதில், மொட்டு சின்னத்தில் போட்டியிடும் பொதுஜன பெரமுனவின் வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. எனினும் இந்தக் கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், இன்று கட்சியின் நிறைவேற்றுக் கழு மற்றும் தேசிய செயற்கழுவின் கூட்டம் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.

பொதுச் சின்னத்தில் போட்டியிட்டால் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து இந்தக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டு முடிவு எடுக்கப்படும்.

எனினும், இறுதி முடிவு, எதிர்வரும் 5ஆம் நாள் நடக்கவுள்ள கட்சியின் சிறப்பு செயற்குழுக் கூட்டத்திலேயே எடுக்கப்படும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் வீரகுமார திசநாயக்க தெரிவித்தார்.