மீள முடியாத அளவிற்கு ஐக்கிய தேசியக் கட்சியை சஜித் அளித்துவிட்டார் – பிரதமர் மஹிந்த

ஐக்கிய தேசியக் கட்சியை இனிமேல் மீள முடியாத அளவிற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச அளித்துவிட்டார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் நடந்த பிரசார கூட்டம் ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், ஐக்கிய தேசிய கட்சி தீவிர ஆதரவாளர்கள் தற்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்துள்ளனர் என கூறினார்.

மேலும் கடந்த நான்கு ஆண்டுகளில் கணிசமான எதுவும் செய்யப்படவில்லை என்பது இரகசியமல்ல என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

நாட்டின் வரலாற்றில் மிகப் பழமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாந ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து கடந்த காலங்களில் பலர் பிரிந்தனர் என்றும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சஜித் பிரேமதாச ஏற்படுத்திய சேதத்தை யாராலும் மறக்க முடியாது என்றும் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.