மீள்குடியேறியுள்ள மக்கள் தொடர்பில் ஜரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆய்வு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் இன்றைய தினம்(வெள்ளிக்கிழமை) வவுனியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் பல பாகங்களுக்கும் விஜயம் மேற்கொண்டு இலங்கையின் அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பாக பார்வையிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பாக கேட்டறியும் கலந்துரையாடல் இன்று பிற்பகல் வவுனியா மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம். ஜ. ஹனீபா தலைமையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இதன்போது மாவட்டத்தின் அபிவிருத்திப்பணிகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய கலந்துரையாடலை நிறைவு செய்து கொண்டு வவுனியாவில் மீள்குடியேற்றப்பட்ட பிரதேசங்களுக்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை நேரில் ஆராய்ந்துள்ளனர்.