மீன் சின்னத்தில் விக்கி

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மீன் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

எமது கூட்டணியின் சின்னமாக மீன் சின்னம் தேர்தல் ஆணைக்குழுவினால் அதிகரிக்கப்பட்டு வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.