மீண்டும் ரஜினி பட டைட்டிலில் தனுஷ்… ஆனால் இம்முறை பாதிதான்!

i3.phpதனுஷ் தயாரித்து சிவகார்த்திகேயன் நடித்த ‘எதிர் நீச்சல்’ மற்றும் ‘காக்கி’ சட்டை ஆகிய படங்களை துரை செந்தில்குமார் இயக்கியிருந்தார். தற்போது இவர் தன் தயாரிப்பாளரான தனுஷை இயக்கவிருக்கிறார்.

இப்படத்தில் முதன்முறையாக தனுஷ் இருவேடங்களில் நடிக்கிறார். அப்போ நாயகிகளும் இரண்டு வேண்டும்தானே… த்ரிஷாவும், அஜித்தின் மச்சினி ஷாம்லியும் ஜோடியாக நடிக்கின்றனர். இவர்களும் தனுஷுடன் இணைவது இதுதான் முதன்முறையாகும்.

‘இளையதளபதி’ விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் இப்படத்தில் தனுஷின் தந்தையாக நடிக்கிறார். இப்படம் அரசியல் சார்ந்த த்ரில்லர் கதை என்பதால் தனுஷுக்கு அரசியல் சொல்லிக் கொடுக்கும் வேடத்தில் நடிக்கிறார் எஸ்ஏசி. அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் பொள்ளாச்சியில் தொடங்கவிருக்கிறது.

சமீபகாலமாக ரஜினியின் படத்தலைப்புகளை தனுஷ் பயன்படுத்தி வருகிறார். எனவே இப்படத்திற்கும் ரஜினி படத்தலைப்பை எதிர்பார்த்தனர். எதிர்பார்த்ததை போலவே இம்முறையும் பயன்படுத்தியுள்ளார்.

ஆனால் இம்முறை பாதியை மட்டுமே பயன்படுத்தி இருக்கிறாராம். இப்படத்திற்கு ‘கொடி’ என்ற பெயரை பயன்படுத்தவுள்ளனர். இது அரசியல் சார்ந்த படம் என்பதால் இத்தலைப்பே முன்னணியில் உள்ளதாம்.

கடந்த 1988ஆம் ஆண்டு பாரதிராஜா தயாரித்து இயக்கிய ரஜினி படத்திற்கு ‘கொடி பறக்குது’ எனப் பெயரிடப்பட்டது இங்கே நினைவு கூறத்தக்கது.

LEAVE A REPLY