மீண்டும் ரசிகர்களுக்காக விக்ரம்!

vikram_1368511572_600x450‘ஐ’ படத்திற்குப் பிறகு விக்ரம் நடித்து வரும் படம் ‘பத்து எண்றதுக்குள்ள’. இதில் விக்ரமுக்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். ‘கோலி சோடா’ படத்தை இயக்கிய விஜய் மில்டன் இப்படத்தை இயக்கியுள்ளார். பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் மூலம் ஏ.ஆர். முருகதாஸ் இப்படத்தை தயாரித்திருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிங்கிள் ட்ராக் வெளியானது. இமான் இசையில் அமைந்த இந்த பாடல் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை செப்டம்பர் 30-ம்தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கின்றனர். இது ரசிகர்களுக்கு மீண்டும் விருந்தாக அமையும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இப்படம் அக்டோபர் மாதம் 21-ம் தேதி வெளியிட இருக்கின்றனர்.

LEAVE A REPLY