மீண்டும் யுத்­த­மொன்று ஏற்­ப­டா­த­வ­கையில் இந்த நாட்டை எவ்­வாறு சீர்­ப­டுத்­து­வது

12105733_10153591926591327_5953580736372417145_nநல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை, நம்­பிக்கை, புரிந்­து­ணர்வு என்­ப­வற்றை நாங் கள் பரந்­த­ளவில் பலப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். மீண்டும் யுத்­த­மொன்று ஏற்­ப­டா­த­வ­கையில் இந்த நாட்டை எவ்­வாறு சீர்­ப­டுத்­து­வது.

யுத்தம் இடம்பெற்­ற­மைக்கான கார­ணங்கள் போன்­ற­வற்றைக் கண்­ட­றிந்து அவை மீண்டும் இடம்பெறா­த­வாறு செயற்­ப­ட ­வேண்­டிய தேவை அர­சாங்கத்­திற்கு இருக்­கின்­றது என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

நாட்டை முன்­னேற்றவும், மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தவும் இனங்­க­ளுக்­கி­டையில் ஒற்­று­மையை கட்­டி­யெ­ழுப்­பவும் தேசிய ஒற்­றுமை அவ­சியம் என்­ப­துடன் சர்­வ­தேச
உத­வியும் தேவை­யாகும். இன்று உலகில் எந்­த­வொரு நாடும் எந்­த­வொரு தலை­வரும் எந்­த­வொரு சர்­வ­தேச அமைப்பும் எமக்கு எதி­ரி­யாக இல்லை என்றும் அவர் குறிப்­பிட்­டி­ருந்தார்.

பொலன்­ன­றுவை கதி­ரு­வெல முஸ்லிம் மத்­திய மகா­வித்­தி­யா­லத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

ஜனா­தி­பதி அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்,

கடந்த 3 தசாப்­த­கா­ல­மாக எமது நாட்டில் நில­விய பயங்­க­ர­வாத யுத்தம் கார­ண­மாக நாட்டில் சிங்­கள, தமிழ் முஸ்லிம் மக்கள் பாரிய அபா­யங்­களை சந்­தித்து வந்­தனர். அது­மட்­டு­மன்றி சிங்­கள மற்றும் தமிழ் மக்கள் பாரிய சிக்­கல்­க­ளுக்கு முகம் கொடுத்­தனர். யுத்தம் ஏன் நடை­பெற்­றது. மீண்டும் யுத்­த­மொன்று ஏற்­ப­டா­த­வ­கையில் இந்த நாட்டை எவ்­வாறு சீர்­ப­டுத்­து­வது. யுத்தம் இடம் பெற்­ற­மைக்­கான கார­ணங்­கள்­போன்­ற­வற்றை கண்­ட­றிந்து அவை மீண்டும் இடம் பெறா­த­வாறு செயற்­ப­ட­வேண்­டிய தேவை அர­சாங்­கத்­திற்கு இருக்­கின்­றது.

அதனால் சிங்­களம், தமிழ், முஸ்லிம் என்ற பேத­மில்­லாமல் அனை­வரும் ஒன்­றி­ணைந்து இந்த நாட்டின் முன்­னேற்­றத்தை நோக்கி கொண்டு செல்ல வேண்டும். நான் கடந்த வாரம் கிளி­நொச்சிப் பகு­திக்கு விஜயம் செய்­தி­ருந்தேன். அதன் பின்ரன் கம்­பளை, கொத்­மலை, பிர­தே­சத்­திற்கும் சென்றேன். தெற்கில் காலி, மேற்கில் ஜா -எல போன்ற பிர­தே­சங்­க­ளுக்கு .சென்று பல்­வேறு தேசிய மட்ட நிகழ்­வு­களை நடத்­தினோம். முழு­நாட்­டையும் ஒரே அளவில் அபி­வி­ருத்தி செய்­வதே எமது நோக்­க­மாகும்.

அபி­வி­ருத்­தியில் எதற்கு முன்­னு­ரிமை அளிக்­க­வேண்­டு­மென ஆரா­ய­வேண்டும். அது­மட்­டு­மன்றி பிர­தேச அபி­வி­ருத்­தி­யிலும் முதன் தேவை எது என்­பதை பார்க்­க­வேண்டும். முஸ்லிம் மக்கள் கடந்த சில வரு­டங்­க­ளாக பாரிய மன அழுத்­தங்­க­ளுக்கு உட்­பட்­டனர். சில சக்­தி­களின் ஊடாக மறைந்த அர­சியல் கரங்கள் பள்­ளி­வா­சல்கள் மீது தாக்­குதல் நடத்­தின . வர்த்­தக நிலை­யங்­களை தீ வைத்­தனர். சிலர் இந்த நாட்டை விட்டு வெளி­யேற முயற்­சித்­தனர். எனினும் அவ்­வாறு சுய அர­சி­ய­லா­பத்­துடன் செயற்­பட்டு நாட்டை முன்­னேற்ற முடி­யாது. மிலேச்­ச­ன­மான யுத்தம் தொடர்பில் உங்­க­ளுக்கும் எனக்கும் அனு­ப­வங்கள் உள்­ளன. யுத்தம் என்­பது ஒரு நாட்டின் அனைத்து விட­யங்­க­ளையும் அழித்து விடும். மனி­தர்­களின் மனி­தா­பி­மா­னத்­தையும் யுத்தம் அளித்து விடும். உண்­மை­யையும், சமூக பண்­பு­க­ளையும் நல்ல கொள்­கை­க­ளையும் ஒழுக்­கத்­தையும் பொரு­ளா­தா­ரத்­தையும் யுத்தம் அழித்து விடும்.

யுத்தம் என்­பது உலகில் எந்­த­வொரு நாட்­டுக்கும் எந்­த­வொரு இனத்­திற்கும் எந்­த­வொரு மதத்­திற்கும் உரி­தா­ன­தல்ல. எனவே யுத்த காலத்தில் நாம் பெற்ற அனு­ப­வங்­களைக் கொண்டு புதிய நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பவே தேசிய அர­சாங்­கத்தின் ஊடாக வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுக்­கின்றோம். நாட்டின் அனைத்துத் தரப்­பி­ன­ரதும் நம்­பிக்­கையைப் பெற்று நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப வேண்டும். நல்­லி­ணக்கம், தேசிய ஒற்­றுமை, நம்­பிக்கை, புரிந்­து­ணர்வு, என்­ப­வற்றை நாங்கள் பரந்­த­ளவில் பலப்­ப­டுத்திக் கொள்­ள­வேண்டும். வெவ்­வேறு மாவட்­டங்­களில் மக்­களின் கருத்­துக்கள் ஒன்­றுடன் ஒன்று வேறு­பட்­ட­தாகும்.

அது­மட்­டு­மன்றி நாட்டில் தோட்டப் பகு­தி­களில் வாழ்­கின்ற மக்கள் பல்­வேறு பிரச்­சி­னை­க­ளுக்கு முகம் கொடுக்­கின்­றனர். அரச நிறு­வ­னங்­களில் வரு­டாந்த ஆட்­சேர்ப்­புக்கு விண்­ணப்­பங்­களை கோரினால் வடக்கு, மற்றும் மலை­ய­கத்­தி­லி­ருந்து தேவை­யான அளவு விண்­ணப்­பங்கள் கிடைப்­ப­தில்லை. ஆசி­ரியர் சேவை, தாதியர் சேவை, சுகா­தா­ரத்­துறை, மக்கள் சுகா­தார பரி­சோ­த­கர்கள் துறை, போன்­ற­வற்­றுக்கு ஆட்­சேர்ப்பு செய்ய இந்தப் பகு­தி­களில் தகு­தி­யா­ன­வர்கள் இல்­லாத நிலை காணப்­ப­டு­கின்­றது.

எனவே காணப்­ப­டு­கின்ற பிரச்­சி­னை­களை அடை­யாளம் கண்டு அவற்­றுக்கு தீர்வு காணப்­ப­ட­வேண்டும். இவை தேசிய மட்டம் சர்­வ­தேச அள­விலும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­வை­யாக காணப்­ப­டு­கின்­றது. இந்த நாட்டை அபி­வி­ருத்தி செய்­வ­தற்­காக பாரிய தடை­யாக காணப்­பட்ட உல­கத்தை வெல்லும் தேவையை கடந்த காலங்­களில் நாம் நிறை­வேற்­றினோம். இந்த நாட்டின் ஜனா­தி­ப­தி­யாக வரும்­போது உலகின் பிர­பல நாடுகள் சர்­வ­தேச அமைப்­புக்கள் இலங்கை தொடர்பில் நல்­லெண்­ணத்­துடன் இருக்­க­வேண்டும். எனவே எம­து­நாட்­டுக்­கான உத­விகள் நிறுத்­தப்­பட்­டி­ருந்­தன.

நாட்டை முன்­னேற்­று­வதில் பல பிரச்­சி­னை­களை நாம் சந்­தித்­தி­ருந்தோம். ஜன­வரி 8ஆம் திகதி ஆட்சி மாறி­ய­போது இலங்­கைக்கு பொரு­ளா­தார தடைகள் விதிக்­கப்­படும் அடிப்­படை நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டிந்­தன. ஜி.எஸ்.பி. சலு­கையை நாம் இழந்­தி­ருந்தோம். எமது மீன் ஏற்­று­மதி தடை செய்­யப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­மைகள் இன்னும் மாற்­ற­ம­டை­ய­வில்லை. அடுத்த வருடம் ஜன­வரி மாதம் வரும்­போது இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணுவோம். ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கா­விடின் கடந்த மார்ச் மாதம் அழுத்தம் கூடிய வித்­தி­யா­ச­மான ஐ.நா. அறிக்கை வெளி­வந்­தி­ருக்கும்.

நாம் ஜன­வரி மாதம் புதிய அர­சாங்கம் உரு­வா­கி­யுள்­ளதால் எமக்கு முன்­னேற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு கால அவ­காசம் தரு­மாறு ஐக்­கிய நாடுகள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனிடம் கோரிக்கை விடுத்­தி­ருந்தோம். சர்­வ­தேச சக்­திகள் எமது கோரிக்­கைக்கு செவி­சாய்த்து கால அவ­கா­சத்தை தந்­தன. ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் பிரே­ர­ணையின் ஊடாக வெளி­நா­டுகள் பிர­தி­நி­திகள் இலங்­கைக்கு வரு­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­பட்­டுள்­ள­தாக தேசப்­பற்­றா­ளர்கள் என தம்மை அடை­யா­ளப்­ப­டுத்­துவோர் கூறு­கின்­றனர். நான் அமெ­ரிக்­காவில் இருந்து இலங்கை வந்­ததும் இந்த குற்­றச்­சாட்­டுக்­க­ளுக்கு பதி­ல­ளித்­தி­ருந்தேன்.

இந்த நாட்டை முன்னேற்றவும், மாற்றத்தை ஏற்படுத்தவும் இனங்களுக்கிடையில் ஒற்றுமையை கட்டியெழுப்பவும் தேசிய ஒற்றுமை அவசியம் என்பதுடன் சர்வதேச உதவியும் தேவையாகும். இன்று உலகில் எந்தவொரு நாடும் எந்தவொரு தலைவரும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் எமக்கு எதிரியாக இல்லை. ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்துடன் நான் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினேன். அவர் மிகவும் சுமுகமாக எம்முடன் உரையாடினார். கடந்த 10 மதங்களில் நாம் உலகத்திற்கு வெளிக்காட்டிய சிறந்த வேலைத்திட்டம் காரணமாக இன்று உலகின் அனைத்துத் தரப்பும் எம்முடன் நட்புறவுடன் இருக்கின்றன. எமக்கு சர்வதேசத்தில் இன்று எதிரிகள் இல்லை.

LEAVE A REPLY