மீண்டும் முக்கிய பதவிக்கு வரவுள்ள பசில் ராஜபக்ஷ?

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு மீண்டும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பதவி வழங்கப்படலாம் என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இரட்டை பிரஜாவுரிமை குறித்த கட்டுப்பாடுகளை 20வது திருத்தம் நீக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்து இரண்டு மூன்று மாதங்களில் ஜயந்த ஹெட்டாகொட என்ற அரசதரப்பு நடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகி பசில் ராஜபக்ஷவுக்கு வழிவிடுவார் என அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

பசில் ராஜபக்ஷ முன்னைய மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக அவர் பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.