மீண்டும் சூப்பர்ஸ்டார் ஜோடியாகும் மீனா

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். அவரது நடிப்பில் வில்லன் படம் இந்த வாரம் திரைக்கு வர இருக்கிறது.

மோகன்லால் தற்போது பிரமாண்டமாக தயாராகி வரும் ‘ஒடியன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தாக அவர் நடிக்க இருக்கும் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதை அஜய் வர்மா என்ற புதிய இயக்குனர் இயக்குகிறார்.

இந்த படத்தில் நாயகிகளாக மீனாவும், திரிஷாவும் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. மீனா ஏற்கனவே மோகன்லாலுடன் பல படங்களில் நடித்திருக்கிறார். இந்நிலையில் மீண்டும் மோகன் லாலுடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி நிவின்பாலியுடன் ‘ஹேஜுட்’ படத்தில் நடித்ததன் மூலம் மலையாளத்தில் அறிமுகமான திரிஷாவும் அந்த படத்தில் நடிக்க இருக்கிறாராம். மலையாளத்தில் திரிஷாவுக்கு இது 2-வது படம். முதல்முறையாக மோகன் லாலுடன் இணைந்து நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY