மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டோம் – ஜனாதிபதி

இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின்போது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சி இடம்பெற இங்குள்ள மக்கள் இடமளிக்க மாட்டார்கள் என்பதோடு, தாமும் அதற்கு இடமளிக்க போவதில்லையென தெரிவித்தார்.

அத்தோடு மூவின மக்களும் நிம்மதியாக, நல்லிணக்கத்துடன் வாழும் ஆட்சியே தொடர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் தானே பதவி வகிப்பதாகவும் தமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் குறித்து தானே இறுதி முடிவெடுப்பேனென்றும் அவர் தெரிவித்துள்ளார்.