மீண்டும் கர்ப்பமுற தயாராக இருப்பதாக கூறும் உலகில் குழந்தை பெற்ற முதல் ஆண்

தாமஸ் பீட்டியே வெளிப்படையாக அறுவை சிகிச்சை மூலம் ஒரு ஆணாக மாறினாலும் தனது கர்ப்பப்பை முதலான உள்ளுறுப்புகளை அவர் அகற்றவில்லை.

இதனால் செயற்கை கருத்தரிப்பு முறை மூலம் கருவுற்ற அவர் இது வரை மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ளதோடு, தற்போது நான்காவது முறையாக கருவுற தயாராக் இருப்பதாக கூறி உள்ளார்.

முன் தள்ளிய வயிற்றுடன் அவர் நிற்கும் புகைப்படத்தைப் பார்த்து பலரும் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளனர். என்ன, பிரசவம் மட்டும் அறுவை சிகிச்சை முறையில்தான் நடக்கும், என் உடலை நானே சேதப்படுத்த விரும்பவில்லை என்று வேடிக்கையாகக் கூறுகிறார் தாமஸ் பெட்டியே.