மீண்டும் ஒரு ரீமேக்கில் உதயநிதி; நமிதா ஜோடியானார்.

ஜாலி எல்எல்பி என்ற இந்தி படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்தார் உதயநிதி ஸ்டாலின்.

அஹ்மத் இயக்கிய இப்படம் மனிதன் என்ற பெயரில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியானது.

இதனை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு ரீமேக்கில் நடிக்கவிருக்கிறார் உதயநிதி.

இப்படம் பஹத்பாசில் நடித்து மலையாளத்தில் வெற்றிப் பெற்ற
‘மகேஷிண்டெ பிரதிகாரம்’ படத்தின் ரீமேக் ஆகும்.

பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கவுள்ள இப்படத்தில் நாயகியாக பிரபல மலையாள நடிகையான நமிதா பிரமோத் நடிக்கிறாராம்.

தமிழுக்கு ஏற்ப இப்படத்தில் நிறைய மாற்றங்களை செய்துள்ளதாகவும் முக்கிய வேடத்தில் எம்எஸ் பாஸ்கர் நடிக்கவுள்ளதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY