மிருகமாக மாறிய பேஸ்புக்; ஐ.நா அதிர்ச்சி தகவல்!

மியன்மாரில் பேஸ்புக் நிறுவனம் மிருகமாக மாறியுள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டுவதில் பேஸ்புக் பங்கு வகிப்பதாக ஐ.நா சபை குற்றஞ்சாட்டியுள்ளது. இதனடிப்படையில் மியன்மாரில் இனக்கலவரம் குறித்து ஆராய்ந்த குழு ஒன்று பேஸ்புக் மிருகமாக மாறியுள்ளதாக தெரிவித்துள்ளது.

மியன்மாரில் ரக்கைன் மாகாணத்தில் இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடங்கியதால், ரோஹிஞ்சா முஸ்லீம்கள் பங்களாதேஸில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதற்கு காரணமாக, ரோஹிஞ்சா முஸ்லீம்களுக்கு எதிராக கசப்புணர்வை தூண்டுவதற்கு காரணமாக, பேஸ்புக் நிறுவனமே காணப்படுவதாக ஐ.நா சபை ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY