மியன்மாருக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்க வேண்டும்: மன்னிப்பு சபை

மியன்மார் இராணுவ தலைவர்கள் மீது அழுத்தங்களை பிரயோகிப்பது தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியம் கவனம் செலுத்த வேண்டும் என, மனித உரிமைகள் குழுவான சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

தென்கிழக்கு ஆசியாவில் மனித உரிமைகள் பற்றிய ஐரோப்பிய ஒன்றிய கொள்கைக்கமைய மியன்மார் மீது பொருளாதார தடைகளை விதிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்த நிலையிலேயே சர்வதேச மன்னிப்பு சபை இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, மியன்மார் இராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதிக்கும் அணுகுமுறைக்கு தாம் ஆதரவளிப்பதாக மன்னிப்பு சபையின் செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

மேலும் தெரிவித்த அவர், “மியன்மார் மீது பொருளாதா தடைகளை விதிப்பதில் நாம் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டியுள்ளது. ஏனெனில், இராணுவ மற்றும் அரசியல் தலைவர்கள் பெரும்பாலும் பொருளாதார ஸ்திரத்தன்மையுடன் காணப்படுவதால் பொருளாதார தடைகளினால் அவர்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி, அப்பாதிப்புகள் பொதுமக்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே, இராணுவ தலைமைகளை இலக்கு வைப்பதில் நாம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

நாடாளுமன்றத் தலைவர் என்ற பாத்திரத்தினூடா ஆங் சான் சூகி நாட்டின் பத்திரிகை சுதந்திரம், நாட்டின் சிறுபான்மையினர் மற்றும் ஜனநாயகத்திற்கு துரோகம் இழைத்துள்ளார்” எனவும் குறிப்பிட்டார்.