மின் தடைக்கு மின்சக்தி அமைச்சு காரணமென்றால் பதவி விலகுவேன்

நாடு பூராகவும் மின்சார தடை ஏற்பட்டதற்கு மின்சக்தி அமைச்சு பொறுப்புக் கூற வேண்டும் என அது தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்படுமேயாயின் தனது அமைச்சுப்பதவியில் இருந்து விலகுவதாக அமைச்சு டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

மாத்தறை அகுரெஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

“மின்சார அமைச்சில் நான் இன்னும் கற்றுக் கொண்டு உள்ளேன். கற்கும் போதே மின்சாரம் சென்று விட்டது… அன்று மதியமே விசாரணை குழுவொன்றை நியமிக்குமாறு நான் சொன்னேன். எதிர்வரும் திங்கட் கிழமையன்று குறித்த அறிக்கை கிடைக்கும் என நினைக்கின்றேன்… அந்த அறிக்கையில் மின்சக்தி அமைச்சுதான் காரணம் என குறிப்பிட்டிருந்தால் செவ்வாய்க்கிழமையில் இருந்து டளஸ் அழகப்பெரும மின்சக்தி அமைச்சர் இல்லை…” என குறிப்பிட்டார்.