மிகவும் டேஞ்சரான நடிகை: விஜய் நாயகிக்கு கிடைத்த பட்டம்

ஆன்லைனில் சிலசமயம் வித்தியாசமான வாக்கெடுப்புகள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் மெக்ஃபீ என்ற நிறுவனம் இந்தியாவில் மிகவும் டேஞ்சரான நட்சத்திரம் யார்? என்பது குறித்து அண்மையில் ஆன்லைனில் ஒரு வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் முதலிடம் பெற்றவர் நடிகை இலியானா. இவர் விஜய் நடித்த ‘நண்பன்’ உள்பட பல திரைப்படங்களில் நாயகியாக நடித்தவர்.

கடந்த ஆண்டு மிகவும் டேஞ்சரான நட்சத்திரம் லிஸ்ட்டில் இருந்தவர் கபில் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவரது பெயர் இந்த ஆண்டு முதல் பத்து இடங்களில் இல்லை

இலியானாவை அடுத்து ப்ரீத்திஜிந்தா, தபு, க்ரிதி சானோன், அக்சயகுமார் மற்றும் தீபிகா படுகோனே ஆகியோர் 2 முதல் 6 இடங்கள் வரை உள்ளனர், இந்த வாக்கெடுப்பில் ஆன்லைன் மூலம் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு ஆர்வத்துடன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.