மாலை தீவு உப ஜனாதிபதி கைது

ab5c2a22-27a5-4891-a309-e1b6ee3c23a2_S_secvpfமாலத்தீவு அதிபர் யாமீன் அப்துல் கய்யூம் சென்ற படகை வெடிகுண்டு வைத்து தகர்த்து அவரை கொல்ல உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் துணை அதிபர் அஹமத் அடிப் இன்று கைது செய்ப்பட்டார்.

சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதினா நகரங்களுக்கு சென்று ஹஜ் யாத்திரையை நிறைவேற்றிய மாலத்தீவு அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் தனது மனைவியுடன் விமானம் மூலம் டெல்லி வந்து சேர்ந்தார்.

டெல்லியில் இருந்து கடந்த மாதம் 28-ம் தேதி காலை அதிவேக படகின் மூலம் மாலத்தீவு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அவரது படகு திடீரென்று கடலில் வெடித்து சிதறியது. இதில் அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இவ்விபத்தில் காயமடைந்த அதிபரின் மனைவி பாத்திமா இப்ராஹிம், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி நினைவு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூம் மற்றொரு படகுமூலம் பத்திரமாக மாலத்தீவு தலைநகரான மாலே சென்றடைந்தார்.

அதிபர் அப்துல்லா யாமீன் அப்துல் கய்யூமை கொல்ல சதி நடந்ததாகவும், அதில் இருந்து அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டதாகவும் அந்நாட்டு உளவுத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவர்கள் ரகசியமாக விசாரித்து வந்தனர். இந்த சதியில் மாலத்தீவு துணை அதிபர் அஹமத் அடிப்-புக்கும் தொடர்பு இருந்ததாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இந்நிலையில், சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த துணை அதிபர் அஹமத் அடிப், இன்று மாலத்தீவுக்கு திரும்பியபோது விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டின் போலீஸ்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் அலி கூறியுள்ளார்.

LEAVE A REPLY