மாலைதீவு ஜனாதிபதி இலங்கை வருகை!

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் முகமாக மாலைதீவு ஜனாதிபதி சற்றுமுன்னர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.

அந்தவகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இலங்கையை வந்தடைந்த மாலைதீவின் ஜனாதிபதி இப்ராஹிம் மொஹமட் சோலிஹ்கை, விமான நிலையத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.

பாரம்பரிய முறைப்படி மாலை அணிவிக்கப்பட்டு அவருக்கு வரவேற்களிக்கப்பட்டது. அதன் பின்னர், அங்கிருந்த நினைவுப் புத்தகத்தில் அவர் கையெழுத்திட்டார்.

இலங்கையின் 71ஆவது தேசிய சுதந்திரதின நிகழ்வுகள் நாளை (திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளன. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காகவே அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இதேவேளை நாளை மறுதினம் பிற்பகல் 2.30 மணியளவில், இலங்கை வர்த்தக சம்மேளனத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றிலும் மாலைதீவு ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார்.