மாபெரும் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் எதிர்வரும் 30ம் திகதி மாபெரும் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக வவுனியாவில் இன்று (26) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது கருத்து தெரிவித்த அவர்கள்,

எதிர்வரும் 30ஆம் திகதி காலை 10 மணிக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி பேரணி ஒன்றை வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக ஆரம்பிக்கவுள்ளோம்.

குறித்த போராட்டத்திற்கு காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்கள், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், வர்த்தகர்கள், பேருந்து உரிமையாளர்கள் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கட்சி பேதமின்றி அணிதிரண்டு உங்கள் ஆதரவினையும் பங்களிப்பினையும் நல்குமாறு கேட்டுநிற்கின்றோம். – என்றனர்.