மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுகிறேன்: வெங்கையா நாயுடு வேதனை

பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த வாரம் 5-ம் தேதி தொடங்கியது. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து, பி.என்.பி மோசடி, காவிரி மேலாண்மை வாரியம் என பல்வேறு விவகாரங்களில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதன் காரணமாக் கடந்த வாரம் முழுவதும் இரு அவைகளும் பெரும்பாலான நேரங்களில் முடங்கியே இருந்தது.

மேற்கண்ட விவகாரங்கள் குறித்து விவாதிக்க அரசு தயாராக இல்லாத நிலையில், எதிர்க்கட்சிகள் அவையை நடத்த ஒத்துழைக்க மறுத்தன. இந்த நிலையில், இன்று அவை கூடியதும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால், மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து 7-வது நாளாக மாநிலங்களவை நடவடிக்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநிலங்களவை உறுப்பினர்களின் நடவடிக்கைக்காக வெட்கப்படுவதாக வெங்கையா நாயுடு வேதனை தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY