மாநகர, நகர, பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தில் கையெழுத்து

மாநகர சபை, நகர சபை, பிரதேச சபை திருத்தச் சட்டத்தில் சபாநாயகர் கரு ஜெயசூரிய இன்று கையெழுத்திட்டுள்ளார்.

அமைச்சர் பைசர் முஸ்தபாவினால் அண்மையில் குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, அது சில திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.

இதற்கமைய, சபாநாயகர் இன்று காலை 10.00 மணியளவில் இதில் கையெழுத்திட்டுள்ளார்.

இதனை சபாநாயகர் அலுவலகம் உறுதிசெய்துள்ளது.

LEAVE A REPLY