மாகாண சபை தேர்தல் குறித்த நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது கூட்டமைப்பு

மாகாண சபைத் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்பட வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு என, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ் பிரதேசங்களான வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாகாணங்களுக்குமான தேர்தலை வெகு விரைவில் நடத்த வேண்டும்.

மாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் ஜனநாயக ரீதியில் மக்களினால் நியமிக்கப்பட வேண்டும். இன்றேல் அது ஜனநாயக ஆட்சியாக அமைய முடியாது.

மாகாண சபைக்கான உறுப்பினர்கள், மாகாண அரசாங்கம், மாகாண அமைச்சரவை, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆகியோர் ஆற்றக்கூடிய கடமைகளை ஆளுநர்களால் நிறைவேற்ற முடியாது.

எனவே, மாகாண சபை தேர்தலை கூடிய விரைவில் நடத்துமாறு வலியுறுத்துகின்றோம்” எனத் தெரிவித்தார்.