மாகாண சபை தேர்தலை நடத்தாவிட்டால் பதவியை இராஜினாமா செய்வேன்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிற்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்தா விட்டால் தனது பதவியை இராஜினாமா செய்வதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இன்று (28) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை குறித்த திகதிக்கு முன்னர் நடத்துவது பிரச்சினை இல்லை எனவும் நவம்பர் மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்தாவிடின் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தேர்தல் ஆணையாளர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தலை பிற்போடுவது தனது மனசாட்சிக்கு கவலை ஏற்படுத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். வேறு யாருடைய நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்காக தான் இந்த கதிரையில் அமர்ந்திருப்பதில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.