மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை ஆரம்பம்

மாகாண சபைத் தேர்தல் குறித்து ஜனாதிபதியின் வழக்கு விசாரணை தற்போது உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியுள்ளது.

எல்லை நிர்ணய அறிக்கை சமர்பிக்கப்படாத சந்தர்ப்பத்தில் பழைய முறையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தவதற்கு வாய்ப்புகள் உள்ளதா என முடிவு செய்யுமாறு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் குறித்த வழக்கே இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கினை விசாரணை செய்ய நீதிபதி ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக புவனேக அலுவிகார, சிசிர த ஆப்ரூ, பிரசன்ன ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகியோரும் குழுவில் அடங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.