மஹிந்த – மோடி சந்திப்பு

இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையிலான சந்திப்பு தற்போது இடம்பெற்று வருவதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று மாலை (7) இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்துள்ளார்.

இந்தியாவுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று காலை டெல்லியை சென்றடைந்த பிரதமரை இந்தியான் மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சர் சஞ்சய்தோத்ரே வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.