மஹிந்த – மைத்திரி மூடிய அறைக்குள் பேச்சு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவும் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மஹிந்தவின் அழைப்பின் பேரில் குறித்த பேச்சு நேற்று (புதன்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்போது அடுத்த தேர்தலில் களமிறங்க பரந்துபட்ட கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும் இந்த விடயத்தில் இவர்கள் இருவரும் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க தவறி விட்டதாகவும் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.