மஹிந்த அணியுடனான சந்திப்பு வெற்றி என்கிறார் தயாசிறி ஜயசேகர

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனான சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளுக்குமிடையிலான 2 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை, கொழும்பில் அமைந்துள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற்றது.

இந்த தீர்மானமிக்க பேச்சுவார்த்தையில், புதிய கூட்டணி ஒன்றை அமைப்பது தொடர்பான 20 காரணிகள் ​குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், மூன்றாம் கட்டப் பேச்சுவார்தைக்காக, எதிர்வரும் ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி, இவ்விரு கட்சிகளும் கூட தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.