மஹிந்த அணியின் வேட்பு மனுவொன்றை ரத்து செய்யக் கோரி மனு

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியினால் மடுல்ல பிரதேச சபைக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள வேட்பு மனுவில் பாடசாலை அதிபர் தரத்திலுள்ள ஒருவரும் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவர் தேர்தலுக்காக போட்டியிடுவது தேர்தல் சட்டதிட்டங்களுக்கு முரணானது எனவும் எனவே, குறித்த வேட்பு மனுவை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் எனவும் அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY