மஹிந்தவிற்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகம்: கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம்

மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்றது.

இதன்போது, எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷ இதுவரை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்காமை குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டது.

முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஆர்.சம்பந்தன் இதுவரை அலுவலகத்தை ஒப்படைக்காமையே மஹிந்த ராஜபக்ஷ கடமைகளை ஆரம்பிக்க தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், மஹிந்தவிற்கு எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தை பெற்றுக் கொடுப்பது குறித்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கருத்திற் கொள்ளப்பட்டுள்ளது.