மஹிந்தவின் உறுப்புரிமை குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டது சுதந்திரக் கட்சி

எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கட்சி உறுப்புரிமை இரத்து செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர கட்சி அறிவித்துள்ளது. இதனால் மஹிந்த ராஜபக்ஷவின் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் பதிவி பறிபோகும் என எதிர்பார்க்கற்படுகின்றது.

சுதந்திர கட்சி தலைமையகத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்று வரும் ஊடக சந்திப்பிலேயே இவ்விடயத்தை கட்சியின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சுதந்திர கட்சி உறுப்புரிமையானது, கட்சி யாப்பின் பிரகாரம் மாற்று கட்சியில் உறுப்புரிமையையும் பதவியையும் பெற்றுக்கொண்டதற்கு அமைய இயல்பாகவே இரத்தாகியுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு சார்பாக கடந்த 2015 தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியிருந்ததுடன் கடந்த வருடம் இடம்பெற்ற ஆட்சி கவிழ்ப்பு நடவடிக்கையின் பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

மேலும் சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்றுவரும் இந்த ஊடக சந்திப்பில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.