மலிவு விலையில் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு !

‘கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ‘ஜி — 20’ நாடுகள் முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்; மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்” என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஒருங்கிணைந்த அமைப்பான ‘ஜி — 20’ நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் கூட்டம் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக நேற்று நடந்தது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது:

கொரோனா பெருந்தொற்று காலத்திற்கான சர்வதேச நடவடிக்கைகள் குறித்து ஜி — 20 நாடுகளை சேர்ந்த நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி கவர்னர்கள் இணைந்து கடந்த ஏப்ரலில் செயல் திட்டத்தை வகுத்தனர்.

இந்நிலையில் கொரோனா நெருக்கடியை முடிவுக்கு கொண்டுவர ‘ஜி — 20’ நாடுகள் முயற்சிகளை மேலும் தீவிரப்படுத்த வேண்டும். மலிவு விலையில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.இவ்வாறு பேசினார்.