மருந்து விலை குறைப்பால் 09 பில்லியன் ரூபா பிரதிபலன்

மருந்து விலை குறைப்பின் பிரதிபலன் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மருந்து விலை குறைக்கப்பட்டுள்ளது போன்றே சர்வதேச நிறுவனங்களும் மருந்து உற்பத்திகளின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இந்த விலை குறைப்பின் காரணமாக ஆண்டொன்றுக்கு 09 பில்லியன் ரூபா பிரதிபலன் நாட்டுக்கு கிடைப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர், சர்வதேச மருந்து உற்பத்தி விலைகள் குறைக்கப்பட்டதன் பிரதிபலன் இலங்கைக்கு மாத்திரம் கிடைப்பது விஷேட அம்சமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்

LEAVE A REPLY