மருத்துவ ஆய்வில் மகத்தான புரட்சி: கருப்பை புற்றுநோயை எதிர்க்கும் மாத்திரை தயார்

187410f2-f395-4713-8fa8-1ce9c432b629_S_secvpf.gifபுகையிலை பழக்கத்துக்கு ஆளான ஆண்களைக் காட்டிலும் அதிகமான பெண்கள் மார்பகம் மற்றும் கருப்பை சார்ந்த புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர். உலகுக்கு புதிய உயிர்களை அறிமுகப்படுத்தும் தாய்மார்களின் கருவறை புற்றுநோயின் தாக்கத்தால் கரையானால் அரிக்கப்பட்ட மரப்பொருட்களாக அழிந்து, சிதைந்துப் போக நேரிடுகிறது.

இதற்கு ஒரே தீர்வாக கருப்பையை முழுமையாக அகற்றி விடுவதே வாடிக்கையாக உள்ள நிலையில் இந்நோயை தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ வேறு வழியில்லை என்ற நிலைதான் நீடித்து வருகின்றது. இதை தவிர்க்கும் வகையில் உலகிலுள்ள பல்வேறு முன்னணி மருந்து நிறுவனங்கள் ஆய்வுகளை நடத்திவந்தன.

இந்நிலையில், இங்கிலாந்தை சேர்ந்த ஆஸ்ராஜெனெகா நிறுவனம் கருப்பை புற்றுநோயின் தாக்கம் மேலும் பரவாமல் தடுக்கும் புதியவகை மருந்து ஒன்றை கண்டுபிடித்தது.

ஓலாபாரிப் (olaparib) என பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்தின் மாதிரியை அந்நாட்டின் மருந்து கட்டுப்பாடு வாரியத்துக்கு அனுப்பி வைத்தது. இது புற்றுநோயின் முதல் மற்றும் இரண்டாம்கட்ட வளர்ச்சியை 82 சதவீதம் கட்டுப்படுத்தும் என மதிப்பிடப்பட்ட நிலையில் விலை சற்று அதிகமாக இருந்ததால் ஆஸ்ராஜெனெகா நிறுவனத்துடன் அரசு அதிகாரிகள் இதுதொடர்பாக விவாதித்து வந்தனர்.

இறுதியாக, இதில் உடன்பாடு ஏற்படவே, ஓலாபாரிப் மாத்திரைகளை விற்பனை செய்ய இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது. கதிர்வீச்சு சிகிச்சைக்கு பின்னரும், அறுவை சிகிச்சைக்கு முன்பும் இரண்டாம்கட்ட சிகிச்சை தேவைப்படும் பெண்களுக்கு இந்த மாத்திரைகளை பரிந்துரைக்கலாம் என இங்கிலாந்து அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்த அனுமதியானது உலகம் முழுவதும் கருப்பை புற்றுநோயுடன் போராடிவரும் லட்சக்கணக்கான பெண்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

LEAVE A REPLY