மன்னார் புதைகுழி:அரங்கேறுகின்றன புதிய கதைகள்?

மன்னார் புதைகுழியினை புலிகளால் அரங்கேற்றப்பட்ட படுகொலை புதைகுழியென காண்பிக்க அரசு மும்முரமாக செயற்பட்டுவருகின்றது.

அவ்வகையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட சிங்கள மக்களின் புதைத்த இடமேயென மஹிந்தவின் ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது. ஆனால் தமிழ் புலம் பெயர் அமைப்புக்கள், இராணுவத்தினர் தமிழ் மக்களை கொன்று புதைத்த புதைக்குழிபோல இதனை ஐ,நா சபையில் திரிபுப்படுத்திக் காண்பிக்கிறார்கள் எனவும் அது தெரிவித்துள்ளது.

அந்த அணியின் நாடாளுமன்ற உறுப்பினர், பத்ம உதயசாந்த குணசேகர கருத்து தெரிவிக்கையில் பெருமளவிலான சிறுவர்கள் உள்ளிட்ட மனித எழும்புக்கூடுகள் இதுவரையில் மன்னார் மனிதப் புதைக்குழியிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும், இதனை விசாரணை செய்வதற்கு தடயவியல் நிபுணர்கள் இலங்கையிலேயே இருக்கிறார்கள். ஆனால், திட்டமிட்டப்படி அந்த மனிதப் புதைக்குழி தொடர்பான மாறுப்பட்ட எண்ணகருவை தோற்றுவிக்க வேண்டும் என்பதற்காக, இந்தியாவிலிருந்து தடயவியல் நிபுணர்கள் அழைத்து வருவதற்கு மன்னார் நீதிமன்றில் அனுமதிக் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்தார்.

இதனிடையே முன்னாள் வடகிழக்கு முதலமைச்சர் வரதராசாப்பெருமாள் தரப்போ அது தமது கட்சியின் உறுப்பினர்கள் 1990ம் ஆண்டுகளில் படுகொலை செய்யப்பட்ட பின்னர் புதைக்கப்பட்டதாக புதிய கதைகளை அவிழ்த்துவிட்டுள்ளனர்.