மனித உரிமை விவகாரங்கள் – பிரித்தானிய அமைச்சருடன் மங்கள பேச்சு

ஐ.நா மற்றும் கொமன்வெல்த்துக்கான, பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் தாரிக் அகமட் பிரபுவை சிறிலங்கா நிதியமைச்சர் மங்கள சமரவீர சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

லண்டன், வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள தாரிக் அகமட் பிரபுவின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம், உள்ளிட்ட ஏனைய விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.