மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும்: டக்ளஸ்

மத்திய அரசுகள் நேரிலோ, உயர்மட்டத்திலிருந்தோ நடவடிக்கை எடுத்திருந்தால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டப்பட்டிருக்கும் என, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”யுத்தத்திற்கு முகங்கொடுத்து ஈடுசெய்ய முடியாத பாதிப்புக்குள்ளாகியுள்ள வடக்கு – கிழக்கு மக்களின் அபிலாசைகளின் அடிப்படையிலேயே அப்பகுதிகளின் அபிவிருத்தி, மீள்குடியேற்றம், தொழில்வாய்ப்பு என்பன முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் மத்திய அரசியல் தலைமைத்துவங்களின் பாரபட்சங்களின் காரணமாக இவை தவிர்க்கப்படுகின்றன” எனத் தெரிவித்தார்.