மது குடிப்போருக்கான குறைந்தபட்ச வயதை 23 ஆக அதிகரிக்க கேரள அரசு முடிவு

கேரளாவில் உம்மன் சாண்டி தலைமையிலான காங்கிரஸ் அரசு கடந்த 2013-ம் ஆண்டு கேரளாவில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து கேரளாவில் மது விலக்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி மதுபான பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் உள்ள 730 பார்கள் மற்றும் கடைகள் மூடப்பட்டன.

இந்நிலையில் பினராய் விஜயன் தலைமையில் கம்யூனிஸ்ட் ஆட்சி அமைந்ததும் மதுவிலக்கு நீக்குவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மதுவிலக்கை வாபஸ் பெற கேரள அமைச்சரவை முடிவு செய்தது. அதன் படி கடந்த ஜூன் மாதம் கேரளாவில் இருந்த மது விலக்கு வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில் தற்போது கேரளாவில் மது குடிப்போருக்கான குறைந்த பட்ச வயது வரம்பை 23 ஆக அதிகரிக்க அம்மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதை தடுத்திடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY