மதுபானசாலைகளை மூடுங்கள் – அரசாங்கத்திடம் பேராயர் கோரிக்கை!

நீர்கொழும்பிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை இந்த கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

நாட்டில் காணப்படுகின்ற பதற்றமான சூழ்நிலையை அடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நீர்கொழும்பில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை இரண்டு தரப்பினரிடையே மோதல் சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது.

இதன்போது சில வாகனங்கள் எரியூட்டப்பட்டிருந்ததுடன், பொது சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த விசேட அதிரடி படையினர் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்தனர்.

இந்தநிலையிலேயே நீர்கொழும்பிலுள்ள மதுபானசாலைகளை மூடுமாறு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.