மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா அமைப்பு

உலகிலேயே மதம் தொடர்புடைய முதல் பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உருவாக்க்ப்பட்டு உள்ளது. பேனோஸ் ஐரீஸின் மையத்தில், டியர்ரா சான்டா என்ற பெயரில் பொழுதுபோக்கு பூங்கா உருவாக்க்ப்பட்டு உள்ளது

இயேசு காலத்தில் இருந்த ஜெருசலத்தின் தெருக்களை அப்படியே பிரதிபலிக்க டியர்ரா சான்டா என்ற அமைப்பு முயற்சித்துள்ளது.

பொழுது போக்கு பூங்காவிற்கு வருகை தந்துள்ள பார்வையாளர்கள், குறுகிய தெருக்களில் நடப்பட்டுள்ள பிளாஸ்டிக் பனை மரங்கள், சிலைகள் மற்றும் இயேசுவின் வாழ்விலிருந்து முக்கியமான காட்சிகளிலிருந்த நடிகர்களின் உருவங்கள் வரை அதில் இடம்பெற்றுள்ளவற்றைக் காண முடியும்.

பொழுது போக்கு பூங்காவின் நுழைவாயிலில் நீண்ட வரிசையில் குடும்பங்கள், சுற்றுலாவாசிகள் மற்றும் இளம் தம்பதியர்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கின்றனர்.

பார்வையாளர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்ஜென்டினா முழுவதிலிருந்தும் வந்தவர்கள். சில பார்வையாளர்களுக்கு இந்த பூங்கா கிட்டத்தட்ட ஒரு புனித இடமாக கருதப்படுகிறது.

பொழுது போக்கு பூங்காவின் முக்கிய அம்சமே இயேசுவின் 60 அடி உயர இயந்திர சிலைதான். பிளாஸ்டரில் செய்யப்பட்ட கோல்கோத்தா மலை உச்சியின் பிரதிபலிப்பிலிருந்து ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இயேசுவின் சிலை மேலெழும்பும்.

இந்த நிகழ்வின் போது ஹாண்டெல்லின் மெஸ்ய்யா பாடலும் ஓங்கி ஒலிக்கும்.

இந்த பொழுது போக்கு பூங்காவிலுள்ள பணியாளர்களின் ஆடை இயேசு கால ஆடை கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பழங்கால ரோமானியர்களை போல உடையணிந்துள்ள பாதுகாவலர்களுடன் அருகில் நின்று பார்வையாளர்கள் புகைப்படம் எடுத்து கொள்ளலாம் அல்லது மத்திய கிழக்கால் ஈர்க்கப்பட்டு அமைக்கப்பட்டுள்ள கஃபே ஒன்றிலிருந்து அப்பங்களை வாங்கிக்கொள்ளலாம்.

LEAVE A REPLY