மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளை தி.மு.க. ஒன்றிணைக்குமா? மு.க.ஸ்டாலின் பேட்டி

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி:- அரசின் சார்பில் இன்று(நேற்று) அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும் என்று நீங்கள் தெரிவித்தும், இந்த அரசு அதை நிறைவேற்ற முன்வரவில்லையே?

பதில்:- தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி நடைபெற்ற போது, காவிரி பிரச்சினைக்காக பலமுறை அனைத்து கட்சி கூட்டம் கூட்டி, அவர்களின் கருத்துகளை கேட்டறிந்து, அட்வகேட் ஜெனரலிடம் விவாதித்து, அதன் பிறகே நீதிமன்றத்தில் அரசின் கருத்துகளை, அரசின் நிலைப்பாட்டை எடுத்து வைத்திருக்கிறார்.

எனவே, அந்த அடிப்படையில்தான் நான், உச்சநீதிமன்றத்தில் எந்தவிதமான கருத்துகளை தாக்கல் செய்ய வேண்டும் என்பது குறித்து விவாதிக்க, தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாய அமைப்புகளை எல்லாம் இன்றே(நேற்று) அழைத்து அனைத்து கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.

கேள்வி:- மதச்சார்பற்ற அரசியல் தலைவர்களை ஒன்றிணைக்க தி.மு.க. முயற்சிக்குமா?

பதில்:- தேர்தல் வரும் நேரத்தில் கண்கூடாக நீங்கள் அதை பார்ப்பீர்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY